சீட்டு பணத்தை வாங்க சென்ற பெண் கூட்டு பலாத்காரமா? - ``3 பெண்கள், 3 ஆண்கள் செய்த பகீர் காரியம்’’
வேலூரில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இளம்பெண் ஒருவர், வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த அந்த இளம்பெண், அல்தாப் தாசின் என்பவரிடம் சீட்டுப் பணம் கட்டிய நிலையில், பணத்தை திரும்ப பெறுவதற்காக, வேலூரில் உள்ள விடுதிக்குச் சென்றபோது, 3 பெண்கள் உள்பட 6 பேர், தன்னை தாக்கியதுடன், அல்தாப் தாசின் உள்ளிட்ட மூன்று பேர், குளிர்பானத்தில் மயக்க மருந்து பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, அல்தாப் தாசின் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
