

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் முருகனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி, முருகன் ஜீவசமாதி அடைவதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக கூறினார். எடை குறைந்து உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முருகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி மனு அளித்துள்ளதாகவும்
புகழேந்தி தெரிவித்தார்.