தாண்டவமாடிய கனமழையால் நிகழ்ந்த அதிசயம்... கொண்டாடும் மக்கள்

x

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஏரி நிரம்பி வெளியேறிய உபரி நீரை, பூத்தூவி, கிடா வெட்டி ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். காட்பாடிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கழிஞ்சூர் ஏரி நிரம்பி 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், சிறப்பு பூஜை செய்த பொதுமக்கள், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று, கிடா வெட்டி, பூத்தூவி தண்ணீரை வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்