வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி மாயம் - அதிர்ச்சியில் உறைந்த தாய்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுமி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி தரணி- பிரியா தம்பதியின் 3 வயது சிறுமி ஜெயபிரியா வீட்டின் முன் சக குழந்தைகளோடு விளையாடி கொண்டிருந்துள்ளார். தாய் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது சிறுமி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலிசார் குழந்தை வழி தெரியாமல் வேறு எங்கேயாவது சென்று விட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரனை ண்டத்தி வருகின்றனர்.
Next Story
