Vellore | கடன் பிரச்சினை மனைவியை தரதரவென இழுத்து ஆட்டோவில் கடத்தி சென்ற கும்பல்

x

வேலூர் கே.வி.குப்பம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் மனைவியை கடத்தி துன்புறுத்தியதாக கணவர் புகாரளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த ஞானவேல், புனிதா என்ற பெண்ணிடம் கடன் வாங்கியுள்ளார்... கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்து வந்த நிலையில், புனிதாவின் உறவினர்கள் சிலர் ஞானவேலின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது... மேலும் வீட்டில் ஞானவேல் இல்லாததால் அவரது மனைவியை ஆட்டோவில் கடத்தி சென்றதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் ஞானவேலின் மனைவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடத்தியவர்கள் தன் மனைவியை தாக்கியதாகவும் ஞானவேல் புகாரில் தெரிவித்துள்ளார். போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்