Vellore | Drug | வீட்டிலேயே போதைப்பொருள் ஃபேக்டரி - ஆக்சனில் இறங்கிய போலீஸ்

x

வீட்டிலேயே போதைப்பொருள் தயாரிப்பு - வேலூரில் அதிர்ச்சி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் வீட்டிலேயே போதைப்பொருள் தயாரித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பிச்சனூர் பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் மாவா எனப்படும் போதை பொருளை இயந்திரம் மூலம் தயாரித்து இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து நரிமுருகப்பா தெரு பகுதியில் உள்ள கோதண்டபானி என்பவரின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்த போதைப் பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கோதண்டபாணியை கைது செய்த போலீசார், அவருடன் தொடர்பில் இருக்கும் போதைப்பொருள் கும்பல் குறித்த தகவலை சேகரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்