"ரூ.5 கோடி மதிப்பில் நாகநதி புனரமைப்பு" - புனரமைப்பு பணிகளை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பார்வையிட்டார்

வாழும் கலை அமைப்பின் சார்பாக நடைபெற்று வரும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நாகநதி புனரமைப்பு பணிகளை, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பார்வையிட்டார்.
"ரூ.5 கோடி மதிப்பில் நாகநதி புனரமைப்பு" - புனரமைப்பு பணிகளை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பார்வையிட்டார்
Published on

வேலூர் மாவட்டத்தில் நாகநதியை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியானது கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த புனரமைப்பு பணிகளை வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பார்வையிட்டார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் உயர் அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், நாகநதி புனரமைப்பு திட்டத்தின்கீழ் உருவாக்கிய உறை கிணறுகளால் நிலத்தடி நீர் மட்டம் பெருகியுள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com