வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், ராணிப்பேட்டை அடுத்த அவரக்கரை பகுதியைச் சேர்ந்த மேகநாதன், மனைவி உமாராணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் உமாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் மேகநாதன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.