அஜித் வராததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்ற ரசிகர்கள்..

வேலூர் ஆபீஸ் சர்ச் சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் கடந்த வியாழக்கிழமை விசுவாசம் படம் நள்ளிரவில் திரையிடப்பட்டது.
அஜித் வராததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்ற ரசிகர்கள்..
Published on

வேலூர் ஆபீஸ் சர்ச் சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில் கடந்த வியாழக்கிழமை விசுவாசம் படம் நள்ளிரவில் திரையிடப்பட்டது. ரசிகர்களிடையே ஏற்பட்ட தகராறில் ரமேஷ், பிரசாந்த் ஆகியோரை 4 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதுடன் கத்தியால் குத்தியுள்ளனர். காயம் அடைந்து அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, நடிகர் அஜித் பார்க்க வருவதாக தகவல் வெளியான நிலையில், அவரது ரசிகர்கள் அங்கு திரண்டனர். அஜித் வரமாட்டார் என போலீசார் கூறி , கலைந்து செல்ல அறிவுறுத்தினர். 6 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com