Vellore | பிள்ளைகளை காணாமல் பதறிப்போன பாட்டி.. தெய்வம் போல வந்து கண்ணில் காட்டிய இளைஞர்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே காணாமல் போன 2 குழந்தைகளை பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சின்ன குழவி மேடு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவருக்கு ரிதிக்ஷா என்ற பெண் குழந்தையும், அஸ்வீன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், இருவரும் பாட்டி பரமேஸ்வரியுடன் கரடிகுடி பகுதியில் நடைபெற்ற சுப நிகழ்வுக்காக சென்றிருந்த போது காணாமல் போனார்கள். குழந்தைகள் அழுது கொண்டிருப்பதை கண்ட அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் விக்னேஷ், இருவரையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து பரமேஸ்வரியிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டனர்.
Next Story
