வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர்.. திடீரென மூச்சுத்திணறி பரிதாப பலி.. பக்தர்கள் அதிர்ச்சி

x

கோவை வெள்ளியங்கிரி மலைக்கோயிலுக்கு சென்ற நபர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மலை மீது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர், காஞ்சிபுரத்தை சேர்ந்த வங்கி ஊழியரான ரமேஷ். இவர் வெள்ளியங்கிரி மலையின் 6வது மலைப்பகுதிக்கு சென்ற போது, அங்கு நிலவிய கடும் பனிப்பொழிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரியவருகிறது. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வனத்துறையினர் உதவியுடன் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து ஆலந்துறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்