Vellai kali |வெள்ளைகாளியை ஜெயிலுக்குள்ளேயே கொ*ல செய்ய திட்டம்..பக்காவாக ஸ்கெட்ச் போட்ட மற்றொரு ரவுடி

சென்னை, புழல் சிறையில் பிரபல ரவுடி வெள்ளைகாளியை கொல்ல, ஒரு கோடி ரூபாய் பேரம் பேசி ச‌தித்திட்டம் தீட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைகாளி தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில் உள்ள கும்பகோணத்தை சேர்ந்த ரவுடி லால் மணிகண்டனுக்கும், வெள்ளைகாளிக்கும் முன்பகை இருந்த‌தாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளைக்காளியை சிறைக்கு உள்ளேயே கொலை செய்ய, லால் மணிகண்டன் கூட்டாளிகள் திட்டமிட்டுள்ளதாக சிறை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து லால் மணிகண்டன், ரகுமான், அஜய் உள்ளிட்ட 4 கைதிகளிடம் சிறை போலீசார் தனித்தனியே தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இதில், வெள்ளைக்காளியை சிறையில் கொலை செய்ய ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட‌தும், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கொலையை அரங்கேற்ற இருப்ப‌தும் தெரிய வந்தது. இதனையடுத்து ரகுமான் திருச்சி சிறைக்கும், அஜய், சீவலபெரியான் கடலூர் சிறைக்கும், லால் மணிகண்டன் சேலம் சிறைக்கும் மாற்றப்பட்டனர். புழல் சிறைக்குள் பிரபல ரவுடியை கொலை செய்ய போடப்பட்ட திட்டம் காவல்துறையின் துரித நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com