வேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு

இயேசுவின் பாதத்தில் முத்தமிட்டு வேண்டுதல்
வேளாங்கண்ணியில் புனித வெள்ளி இறைவழிபாடு
Published on
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று புனித வெள்ளி இறைவழிபாடு தினம் அனுசரிக்கப்பட்டது.வேளாங்கண்ணி பேராலயம் முன்பு நடைபெற்ற புனித வெள்ளி தினத்தையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.திருப்பலியினை பேராலய அதிபர் பிரபாகர் நிறைவேற்றினார்.அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதாரின் பாதத்தில் முத்தமிட்டு தங்களது தவக்கால வேண்டுதலை நிறைவேற்றிகொண்டனர்.இறைவழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com