புரட்டாசி மாத சைவ மீலாது நபி கந்தூரி விழா - கைகோர்த்த மூன்று மத நண்பர்கள்

புரட்டாசி மாத சைவ மீலாது நபி கந்தூரி விழா - கைகோர்த்த மூன்று மத நண்பர்கள்

#dindugal | #temple

புரட்டாசி மாத சைவ மீலாது நபி கந்தூரி விழா - கைகோர்த்த மூன்று மத நண்பர்கள் திண்டுக்கல் பேகம்பூர் பூச்சிநாயக்கன்பட்டி ஜின்னா நகர் நண்பர்கள் குழு சார்பில், மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் 10-ம் ஆண்டு மீலாது நபி கந்தூரி விழா நடைபெற்றது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து பங்கேற்ற நிலையில், புரட்டாசி மாதத்தை கருத்தில் கொண்டு முழுமையாக சைவ உணவு வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. மத வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்றாக உணவருந்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அப்பகுதியில் நிலவும் மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com