Vegetables Price Today | பட்டென்று குறைந்த காய்கறி விலை... மக்களுக்கு செம்ம ஹாப்பி
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் லாரிகளில் காய்கறிகளும் பழங்களும் வந்தடைகின்றன.
தற்போது கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஓரளவு மழை தணிந்ததால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து, விலையும் கிலோ 5 முதல் 7 ரூபாய் வரை குறைந்தது.
அந்த வகையில் கடந்த வாரம் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ், தற்போது 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஊட்டி கேரட், 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அண்டை மாநிலங்களில் மழையின் தாக்கம் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும் சூழலில், கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
