வரத்து அதிகரிப்பு எதிரொலி - காய்கறிகள் விலை வீழ்ச்சி...

வரத்து அதிகரிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிவிலை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.
வரத்து அதிகரிப்பு எதிரொலி - காய்கறிகள் விலை வீழ்ச்சி...
Published on
மழை பொழிவு தொடங்கியுள்ளதால், ஆந்திரா, கேரளா மற்றும் தென் தமிழகத்தில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை பாதியாக குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 1 கிலோ கேரட் விலை 60 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், பீன்ஸ் விலை 90 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது. அவரைக்காய் விலை 60 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும், gfx card 2 பச்சை மிளகாய் விலை 70 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் குறைந்துள்ளது. அதேபோல் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாயில் இருந்து 26 ரூபாயாக சரிவடைந்துள்ளது. வரத்து அதிகரிப்பு மற்றும் ஆடி மாதத்தில் முகூர்த்த நாட்கள் இல்லாதது ஆகியவையே விலை சரிவடைய காரணமாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் காய்கறிகள் விலை மேலும் சரிவடையும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com