Vegitable Price Hike | திடீர் மாற்றம் - இல்லத்தரசிகளுக்கு வந்த அதிர்ச்சி செய்தி
திடீர் மாற்றம் - இல்லத்தரசிகளுக்கு வந்த அதிர்ச்சி செய்தி
Vegitable Price Hike | திடீர் மாற்றம் - இல்லத்தரசிகளுக்கு வந்த அதிர்ச்சி செய்தி
சென்னை கோயம்பேடு சந்தையில் கோடை வெயில் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக எலுமிச்சை பழம் கிலோவிற்கு 30 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் விலை ஒரே நாளில் கிலோவிற்கு 50 ரூபாய் உயர்ந்து, 150 ரூபாயைத் தொட்டுள்ளது. தக்காளி, வெண்டைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றின் விலையும் கிலோவிற்கு 10 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளின் விலையிலும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்
