

சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படையில் பங்கேற்ற 62 உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வு கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப்படையினருக்கு, அரசு பதவி உயர்வு வழங்கியது. அதன்படி, உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பாபு உள்ளிட்ட 62 உதவி ஆய்வாளர்கள், தங்களுக்கு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் நாளை விசாரணைக்கு வருகிறது.