"திராவிட இயக்கங்கள் இருக்காது என எதிரிகள் நினைத்தனர்".. வீரமணி சொன்ன வார்த்தை
திராவிட இயக்கங்களுக்கு வரும் எதிர்ப்புகளை, உரங்களாக நினைத்துக் கொண்டு பயிர்களை சிறப்பாக வளர்க்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். பெரியாரின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் கி.வீரமணி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியார் மறைவுக்கு பின் திராவிடம் மற்றும் சுயமரியாதை இயக்கங்கள் இருக்காது என எதிரிகள் நினைத்ததாகவும், திராவிட இயக்கங்களுக்கு எதிர்ப்புகள் வந்து கொண்டேதான் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Next Story
