தந்தையை அம்மிக்கல்லால் அடித்து கொன்ற மகன் : தாயையும் கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்

வேடசந்தூர் அருகே குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் , தாயையும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையை அம்மிக்கல்லால் அடித்து கொன்ற மகன் : தாயையும் கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்
Published on
வேடசந்தூர் அருகே குடிபோதையில் தந்தையை கொன்ற மகன் , தாயையும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறையை சேர்ந்தவர், வினோத் குமார். குடிபோதைக்கு அடிமையான வினோத்குமாரை அவரது தந்தை செல்வம், தாய் மகாலட்சுமி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார், வினோத்குமார். இதை தட்டி கேட்ட தந்தையை, குடிபோதையில் இருந்த வினோத்குமார் அம்மிகல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு பதறிப்போன தாய் மகனை தடுக்க முயன்றார். அவரை கத்திரிகோலால் வினோத்குமார் சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயமடைந்த மகாலட்சுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வினோத்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தாய், தந்தை மீதான மகனின் இந்த கொடூர தாக்குதல் குஜிலியம்பாறை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com