வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கல்யாணம்...

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கல்யாணம்...
Published on

மயிலாடுதுறை :

வேதாரண்யம் :

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. வேதாரண்யத்தில் அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சியளித்ததாக கூறப்படுவதால், ஆண்டுதோறும் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருமண தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று மகாவிஷ்ணு முன்னிலையில், மலர்கள் மற்றும் காய்கறி தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த சுவாமி சன்னதியில், சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் காட்சியளித்தனர்.

தாராபுரம் :

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஹனுமந்தராய சுவாமி கோயிலில், கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ரத உற்சவ திருவிழா, வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com