VCK | துப்பட்டாவை இழுத்த மகன்.. விசிக மா.செ. மீது வழக்கு பாய்ந்ததால்.. விசிகவினர் மறியல்
விசிக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரனின் மகன், இளம்பெண்ணின் துப்பட்டாவை இழுத்து அத்துமீறிய வழக்கில், விசிக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து, விசிகவினர் அந்தியூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு சின்னக்குளத்தில் கடந்த 17ம் தேதி பொங்கல் விழாவின் போது விசிக மாவட்ட செயலாளர் மகன் நிஷாந்த், அவரது நண்பர்கள் சுரேஷ், தீனதயாளன் ஆகியோர் இளம்பெண்ணின் துப்பட்டாவை இழுத்து அத்துமீறலில் ஈடுபட்டனர். மேலும் இளம் பெண்ணின் குடும்பத்தாரை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதையடுத்து புகாரின் பேரில் விசிக மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் அவரது மகன் நிஷாந்த மற்றும் மகனின் நண்பர்கள் சுரேஷ், தீனதயாளன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் விசிக மாவட்ட செயலாளர் மகன் நிஷாந்த் அவரது நண்பர்கள் சுரேஷ், தீனதயாளன் ஆகிய 3 பேர் கைதும் செய்யப்பட்டனர். இந்நிலையில் விசிக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து அந்தியூர் பகுதியில், சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் 10க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்டவர்களை காவல் நிலையம் அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை, விசிக மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தனது முகநுல் பக்கத்தில் லைவ் வீடியோவாக வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
