VCK | Kanyakumari | டோல்கேட்டில் தகராறு - பேரிகார்டு சேதம் - விசிகவினர் மீது வழக்கு
VCK | Kanyakumari | டோல்கேட்டில் தகராறு - பேரிகார்டு சேதம் - விசிகவினர் மீது வழக்கு
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் டோல் கேட் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு பேரிகார்டை சேதப்படுத்திய விசிக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டோல் கேட்டில் முதல் பூத்தில் உள்ள சர்வர் வேலை செய்யாததால், விசிகவினர் வந்த காரை அங்கு பணியில் இருந்த ஊழியர் ஆகாஷ், இரண்டாவது பூத் வழியாக செல்லுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விசிகவினர் டோல் கேட் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு, பேரிகார்டை உடைத்துள்ளனர்.
இதனால், விசிகவின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் லியாகத் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
