விசிக பிரமுகர் வெட்டி படுகொலை - தி.மலையில் அதிர்ச்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அமைப்பாளர் அக்ரி காமராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொரக்கொளத்தூர் ரயில்வே கேட்ட அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்ட இவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கோரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
