மது போதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த விசிக நிர்வாகி - வைரலாகும் வீடியோ
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மது போதையில் இருந்த விசிக நிர்வாகி ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். பெரியகுளத்தைச் சேர்ந்த தலித் தர்மா என அழைக்கப்படும் தர்மராஜ் மற்றும் பரஞ்சோதி ஆகிய இருவரும் மது போதையில் பொதுமக்களுக்கு தொல்லை அளிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசார் அவர்களை அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு கேட்டுள்ளனர். அப்போது, தர்மராஜ் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஒரு கட்டத்தில் போலீசார் அவர்கள் செயலைக் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இருவர்மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story
