Palani Vasanth & Co | பழனியில் கோலாகலமாக திறக்கப்பட்ட வசந்த் அண்ட் கோவின் புதிய கிளை
இந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான வசந்த் அன்ட் கோவின் புதிய கிளை, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கோலாகலமாகத் திறக்கப்பட்டது. சிவகிரிபட்டி பகுதியில் அமைந்துள்ள இக்கிளையை, நிறுவனத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இதனையொட்டி, ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து பல்வேறு சலுகை விலையில் பொருட்களை வாங்கிச் சென்றனர். பழனி வாழ் மக்களுக்காகப் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கிளையில், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்.இ.டி தொலைக்காட்சிகள், கைபேசிகள் என அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் ஒரே கிளையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. திறப்பு விழாவை ஒட்டி, மதிப்புமிக்க காம்போ ஆஃபர்கள், சிறப்புப் பரிசுகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
