Madurai | Vasanth & co | உசிலம்பட்டியில் வசந்த் அண்ட் கோவின் 145வது கிளை திறப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், வசந்த் அண்ட் கோ-வின் 145வது கிளை திறக்கப்பட்டுள்ளது.
பேரையூர் ரோட்டில், புதிய கிளையை நிர்வாக இயக்குநர்கள் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், தங்கமலர் வசந்தகுமார் இணைந்து ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர். முதல் நாளிலிலேயே நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் வந்து வசந்த் அண்ட் கோ கிளையை பார்வையிட்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாக இயக்குநர் தங்கமலர் வசந்தகுமார், வசந்த் அண்ட் கோவில், சீர்வரிசைக்கு தேவையான அனைத்து பொருட்களும் குறைவான விலையில் தள்ளுபடியுடன் கிடைக்கும் என்று தெரிவித்தார். திறப்பு விழா சலுகையாக 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் தங்க நாணயம் மற்றும் பொருட்கள் வாங்கிச் செல்லும் அனைவருக்கும் நிச்சயப்பரிசு வழங்கப்பட்டு வருவதாகவும் தங்கமலர் வசந்தகுமார் தெரிவித்தார்.
