Chennai | Vasanth & Co | சென்னையில் ஒரே நாளில் வசந்த் & கோ-வின் 3 புதிய கிளைகள் திறப்பு
Chennai | Vasanth & Co | சென்னையில் ஒரே நாளில் வசந்த் & கோ-வின் 3 புதிய கிளைகள் திறப்பு
#chennai #vasanthandco #newbranch #opening #thanthitv
தென்னிந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான வசந்த் அண்ட் கோ நிறுவனம் சென்னையில் ஒரே நாளில் 3 புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது. வடபழனியில்153-வது கிளையை வசந்த் அண்ட் கோவின் நிர்வாக இயக்குனரும், எம்பியுமான விஜய் வசந்த் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் திறந்து வைத்தனர். அதேபோல் சேலையூரில்154-வது கிளை மற்றும் நங்கநல்லூரில்155-வது கிளையை வசந்த் அண்ட் கோவின் பங்குதாரர் தமிழ்ச்செல்வி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. திறப்பு விழா நாள் மட்டும் 25,000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசத் தங்க நாணயம் வழங்கப்படுகிறது... மேலும் 25 வாடிக்கையாளர்கள் தலா ஒரு சவரன் தங்க நகை வெல்லும் ஸ்லோகன் போட்டியும் நடத்தப்படுகிறது.
