Varunkumar IPS | Seeman | சீமானுடன் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் வருண்குமார் IPS பணியிட மாற்றம்

x

டிஐஜி வருண்குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில், திருச்சி டிஐஜி வருண் குமார் உள்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, விஜிலென்ஸ் டிஜிபியாக இருந்த பிரமோத் குமார், ஊர்க்காவல் படை டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

மாநில குற்ற ஆவண காப்பகத்தின் கூடுதல் டிஜிபியாக இருந்த ஆயுஷ் மணி திவாரி, விஜிலென்ஸ் கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊர்க்காவல் படை ஐஜியாக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி டிஐஜி வருண் குமார், சென்னை சிபிசிஐடி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் பலகட்ட எதிர்ப்பு மற்றும் வழக்குகளை தொடுத்து வந்த நிலையில் வருண் குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்