வருண் IPS வழக்கு.. சீமான் தரப்புக்கு நீதிபதி கேள்வி

x

வருண் ஐபிஎஸ் வழக்கில் சீமானிடம் நீதிபதி கேள்வி

சீமானுக்கு எதிராக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சீமான் கட்சியினர், தனது குடும்பத்தினர் மீது சமூக வளைத்தளத்தில் அவதூறு கருத்துக்கள் பதிவிட்டதாக கூறி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஐஜி வருண் குமார் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையில் டிஐஜி வருண் குமார் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு சீமான் தரப்பில் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் கால தாமதம் செய்வதாக கடும் எதிர்ப்பு தெரிவித்நனர்.

இதைத் தொடர்ந்து நீங்கள் பலமான கட்சிதானே, ஏன் கால அவகாசம் கேட்டால் தயங்குகிறீர்கள் என சீமான் தரப்பினரை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து இறுதி விசாரணை வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்