VAO | Patta Change | "30 ஆயிரம் கொடுத்தா தான் வேலை நடக்கும்" - வேலைக்கே உலை வைத்த சாமானியன்

x

விழுப்புரத்தில் பட்டா மாற்றம் செய்ய, விவசாயியிடம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். விக்கிரவாண்டியை சேர்ந்த விவசாயி அண்ணாமலை, பட்டா மாறுதல் செய்ய சாலைஅகரம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷை அணுகியுள்ளார். பட்டா மாற்றம் செய்ய, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கவேண்டும் என சதீஷ் கூறிய நிலையில், அவ்வளவு பணம் இல்லை என விவசாயி கூறியுள்ளார். இந்நிலையில், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தான் பட்டா மாறுதல் செய்வேன் என VAO கறாராக விவசாயி லஞ்ச ஒழிப்புதுறையை அணுகினார். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை விவசாயி சதீஷிடம் கொடுக்கும்பொழுது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் VAO சதீஷை மடக்கி பிடித்து கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்