ஷோ ரூம் வாசலில் ஃப்ரிட்ஜை வைத்து பரபரப்பை கிளப்பிய நபர்

ஷோ ரூம் வாசலில் ஃப்ரிட்ஜை வைத்து பரபரப்பை கிளப்பிய நபர்
Published on

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் குளிர்பதனபெட்டி அடிக்கடி பழுதாவதாக கூறி, ஆட்டோ ஓட்டுநர், பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சுபாஷ் என்பவர், வாணியம்பாடியில் உள்ள ஷோ ரூமில், ஓராண்டுக்கு முன்பு வாங்கிய குளிர்பதன பெட்டியில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், அந்த குளிர்பதன பெட்டியை கடைக்கு கொண்டு வந்து, அதற்குப் பதிலாக புதிய குளிர்பதன பெட்டியைத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு கடையில் இருந்தவர்கள் மறுப்பு தெரிவித்ததால், குளிர்பதன பெட்டியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார். அவரை தடுத்த கடை ஊழியர்கள், பழுது பார்த்து வைப்பதாக கூறி, அவரை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com