4ம் திருமணம் செய்துகொண்டாரா வனிதா..? - பவர்ஸ்டார் சீனிவாசனின் விளக்கம் என்ன..?
குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, சில படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும், தன்னைச் சுற்றி நடக்கும் சர்ச்சைகளால் இப்போதும் அதிகம் கவனிக்கப்படுபவர் நடிகை வனிதா விஜயகுமார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த வனிதாவுக்கு, கடந்த ஆண்டுதான் பீட்டர் பால் என்பவருடன் மூன்றாவதாக திருமணம் நடந்தது. ஆனால், சில மாதங்கள் கூட அந்தத் திருமண உறவு நீடிக்கவில்லை.
இந்நிலையில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலை மாற்றிக் கொண்டது போன்ற புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா விஜயகுமார் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூகவலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து, வனிதா விஜயகுமார் உறுதியான தகவல் எதையும் தெரிவிக்காத நிலையில், பவர்ஸ்டார் சீனிவாசனோ, அது வெறும் திரைப்பட போஸ்டர் தான் என விளக்கம் அளித்திருக்கிறார்.
