

சென்னை வெளிவட்டச் சாலையை இணைக்கும் வண்டலூர் ரயில்வே மேம்பாலத்துடன் கூடிய பிரதான சாலையை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதையடுத்து, தென் மாவட்ட வாகனங்கள் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக செல்லும் என்பதால், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.