Vandalur Lion வண்டலூருக்கு புதிதாக வந்த சிங்கம் `மாயம்’ - 2 நாட்களாக தேடி கிடைக்காததால் பேரதிர்ச்சி

x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 'லயன் சபாரி' பகுதியில்திறந்துவிடப்பட்ட‌ 'சேரு' என்ற புதிய சிங்கம் மாயமானது. சபாரி பகுதியில் திறந்து விடப்பட்ட புதிய சிங்கம் மீண்டும் உணவு உட்கொள்ள வராத‌தால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிங்கத்தை கடந்த 2 நாட்களாக பூங்கா அதிகாரிகள் தேடி வந்த நிலையில், 'லயன் சபாரி' பகுதியில் சுற்றித்திரிவது தெரிய வந்துள்ளது. மாயமான சிங்கம் பூங்காவில் உள்ள 'லயன் சபாரி' பகுதியில்தான் இருப்பதாகவும், வெளியே செல்லவில்லை எனவும் அதிகாரிகள் தகவல். 'லயன் சபாரி' பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சிங்கம் வெளியேற வாய்ப்பு இல்லை என பூங்கா அதிகாரிகள் விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்