Sivaganga | Road Accident | நேருக்கு நேர் மோதிய வேன்-பஸ்.. பயணித்தோர் நிலை? சிவகங்கையில் அதிர்ச்சி
நேருக்கு நேர் மோதிய வேன்-பஸ்.. பயணித்தோர் நிலை? சிவகங்கையில் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில், ஆடிப்பெருக்கு விழாவை முடித்து திரும்பிய சுற்றுலா வேன் அரசு பேருந்து மீது மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருப்புவனம் பைபாஸ் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், வேனின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கிய முருகன் என்பவர் பலத்த காயமடைந்த நிலையில், மேலும் வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
