வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து... உயிருக்கு போராடிய பயணிகள்

x

கரூர் அடுத்த அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கனரக வேனும் ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பானது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் 6 பேர் அரவகுறிச்சி அருகே காரில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த கனரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரும், கனரக வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

தொடர்ந்து அனைவரும் மீட்க்கப்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்