சென்னையில் பயங்கர தீ விபத்து - சேதத்தின் மதிப்பு சுமார் 1 கோடி இருக்கும்

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சென்னையில் பயங்கர தீ விபத்து - சேதத்தின் மதிப்பு சுமார் 1 கோடி இருக்கும்
Published on

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.சுமார் மூன்று தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீயானது அருகில் இருந்த மரங்களுக்கும் பரவியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.சம்பவ இடத்திற்கு வந்த குடோன் உரிமையாளர் ராஜலட்சுமி நடராஜன், சேதத்தின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com