முறைகேடு செய்து பணியில் சேர்ந்த சிஐஎஸ்எப் காவலர் : பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவு

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்த சிஐஎஸ்எப் காவலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
முறைகேடு செய்து பணியில் சேர்ந்த சிஐஎஸ்எப் காவலர் : பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவு
Published on
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு அசாமை சேர்ந்த பிரிகு பாருயா என்பவர் கடந்த 2017ல் சேர்ந்துள்ளார். எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்த அவர், பிறகு நடந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறாததால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய கையெழுத்தை சோதனை செய்ததில் அவர் மோசடி செய்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. இதனால் பிரிகு பாருயா பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com