வள்ளி கும்மி அரங்கேற்ற விழா... ஒரே நேரத்தில் 1000 பேர் நடனம் | Valli kummi Attam

வள்ளி கும்மி அரங்கேற்ற விழா... ஒரே நேரத்தில் 1000 பேர் நடனம் | Valli kummi Attam
Published on

கோவையில் ஒரே நேரத்தில் ஆயிரம் நடன கலைஞர்கள் வள்ளி கும்மி நடனமாடி அசத்தினர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மீண்டும் பாரம்பரிய நாட்டுப்புற கலைகள் பிரபலமடைந்து வருகிறது. ஆர்வம் உள்ளவர்களுக்கு வள்ளி, கும்மி, ஒயிலாட்டத்தை இலவசமாக பலர் கற்றுத்தந்து வருகின்றனர். அதன்படி கோவை அன்னூரில் வள்ளி கும்மியாட்டத்தை கற்று தேர்ந்த மாணவர்களின் 25-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமியர் உள்பட ஆயிரம் நடன கலைஞர்கள் பாரம்பரிய உடையணிந்து நடனம் ஆடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது

X

Thanthi TV
www.thanthitv.com