கல்வி, மருத்துவத்தை இலவசமாக்க வேண்டும் - வைரமுத்து

கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக்கினால் தான், இந்தியா, வல்லரசு நாடாக மாற முடியும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கல்வி, மருத்துவத்தை இலவசமாக்க வேண்டும் - வைரமுத்து
Published on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகப்பட்டியில், வைரமுத்து அறக்கட்டளை சார்பில், அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, இந்தியாவின் கல்விக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தமிழக அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்த வேண்டும் எனவும், மக்களின் அடிப்படை தேவைகளாக விளங்கும் கல்வி மற்றும் மருத்துவத்தை, இலவசமாக வழங்கினால் தான், இந்தியா வல்லரசு நாடாக மாறும் எனவும் வைரமுத்து தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com