

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பகல் பத்து உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. உற்சவத்தின் முதல்நாளான இன்று காலை நம்பெருமாள் நீள்முடி கிரீடம், வைர அபயகஸ்தரம், முத்து மாலை அலங்காரத்தில், அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். இதனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அர்ஜூன மண்டபத்தில் மாலை வரை அருள்பாலிக்கும் நம்பெருமாள், இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். பகல் பத்து உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் வரும் ஜனவரி 5ஆம் தேதியும், அடுத்தநாள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.