மல்லை சத்யா மீது வைகோ பகிரங்க குற்றச்சாட்டு
மதிமுக வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது, அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சென்னை, பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், மல்லை சத்யா தனக்கு எதிராக செயல்படுதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கட்சிக்கு எதிராகவும், தன் மகனிற்கு எதிராகவும் சிலரை தூண்டிவிடுவதாகவும், பல முறை வெளிநாடு சென்று வந்த போதும், மல்லை சத்யா தன்னை மதிமுக துணைப் பொதுச் செயலாளர் என அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை எனவும் வைகோ தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
