Thiruvannamalai | Girivalam | வைகாசி மாத பவுர்ணமி... தி.மலை கிரிவலத்தில் இவ்வளவு கூட்டமா!
வைகாசி மாத பவுர்ணமி... தி.மலை கிரிவலத்தில் இவ்வளவு கூட்டமா!
வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் முடிந்து சொந்த ஊர் செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வந்த பக்தர்கள் முண்டியடித்து கொண்டு ரயிலில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. வைகாசி மாத பௌர்ணமியையொட்டி சுமார் 15 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தனர். இந்நிலையில் வெளி மாநில பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் வந்தவுடன், முண்டியடித்து ஏறி இடம் பிடிக்க முயன்றனர்.
Next Story