Vaigai River| தென் தமிழகத்தின் உயிர்நாடிக்கே இந்த கதியா.. பாலைவனமாகும் தமிழரின் குலக்கொடி
Vaigai River| தென் தமிழகத்தின் உயிர்நாடிக்கே இந்த கதியா.. பாலைவனமாகும் தமிழரின் குலக்கொடி
பாலைவனமாக மாறிய வைகை ஆற்றுப்படுகை தென் தமிழகத்தின் ஜீவநதியான வைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வறட்சி அதிகரித்துள்ளது. மானாமதுரை அருகே கீழப்பசலை மதகு அணைப் பகுதி தண்ணீரின்றி, மணல் மேடுகளாகவும் ஆழமான வெடிப்புகளுடனும் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. வறட்சியை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
