VaikasiVisakam | வடபழனி கோயில் வைகாசி விசாகம் - பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

வடபழனி கோயில் வைகாசி விசாகம் - பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாகம் - பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் #vadapalanimurugantemple #VaikasiVisakam வைகாசி விசாக தினத்தையொட்டி சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயில் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 10 நாட்களாக சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. வைகாசி விசாக நாளில் முருகனை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையால், பக்தர்கள் பால் குடம் சுமந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கங்களுடன் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com