Vadachennai | Udhayanidhi Stalin | வடசென்னை குறித்து உதயநிதி சொன்ன வார்த்தை - ஆர்ப்பரித்த கூட்டம்

x

வடசென்னை மக்கள் கள்ளங்கபடம் இல்லாதவர்கள் என உதயநிதி தகவல்

வடசென்னை மக்கள் கள்ளங்கபடம் இல்லாத மக்கள் என உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 295 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2480 வீடுகளின் ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளர்களுக்கு வழங்கினார். மேலும் திருப்பூர், கோவை உள்ளிட்ட நான்கு பகுதிகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி வயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வடசென்னை மக்கள் கள்ளங்கபடம் இல்லாதவர்கள் என்றும் வட சென்னை பெண்கள், வீரமானவர்கள் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்