Uththarakosamangai | நடராஜருக்கு சாத்தப்பட்டிருந்த சந்தனம் கூவி கூவி விற்பனை?
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை
மங்களநாதர் ஆலயத்தில், சந்தன காப்பு சந்தனம் நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மரகத நடராஜருக்கு சாத்தப்பட்டிருந்த சந்தன காப்பு களையப்பட்ட சில நிமிடங்களிலேயே சிவாச்சாரியார்கள் சிலர் சந்தனங்களை நூறு ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், விற்பனை செய்யப்பட்ட சந்தனம் போலி சந்தனமாக இருக்கலாம் என பக்தர்கள் சந்தேகிக்கின்றனர்.
Next Story
