Instagram harassment || Fake id யில் வித விதமாக ஆபாச புகைப்படங்கள் - சிக்கிய கொடூர காமுகன்
இன்ஸ்டாவில் பெண்களின் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்த இளைஞரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பெண் ஒருவர், தனது புகைப்படங்களை கிராப் செய்து இன்ஸ்டாவில் ஆபாசமாக பதிவேற்றப்பட்டுள்ளதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர், போலி இன்ஸ்டா ஐடி உருவாக்கி பெண்களின் ஆபாச படங்களை பதிவேற்றியது தெரியவந்தது. சைபர் கிரைம் போலீசார் ராஜாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
