மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை தமிழ்நாடு அரசுக்கு வழங்க‌ மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில், நிவாரணத் தொகையாக 8 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசுக்கு வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இடைக்கால நிவாரணத் தொகையாக மூவாயிரம் கோடி ரூபாயை வழங்கிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.

X

Thanthi TV
www.thanthitv.com